வியாழன், 9 செப்டம்பர், 2010

10 வயது சிறுமி மீது வல்லுறவு தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை

அக்கரைப்பற்று 1 ஆம் பிரிவு காதிரியா பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்த வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார். தண்டப் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் தாய் சம்பவம் இடம்பெற்ற 2003 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் வெளிநாடு ஒன்றில் இருந்துள்ளார். சிறுமிக்கு 10 வயதாகவிருந்த போதே இப்பாலி யல் வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் அவருக் கெதிராக தொடரப்பட்ட வழக்கு நடை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல