சனி, 11 செப்டம்பர், 2010

அல்வா சாப்பிடுவதுபோல பல்புகளை சாப்பிட்டு வரும் மனிதர்

சீனாவில் வாங் ஜுன் என்ற 52 வயது மனிதர், அல்வா சாப்பிடுவதுபோல பல்புகளை சாப்பிட்டு வருகிறாராம்.

இதுவரை ஆயிரம் பல்புகளுக்கும் மேல் தின்று தீர்த்த அவர் இந்த பழக்கத்திலிருந்து தன்னால் விடுபட முடியாமல் அடிமையாகிவிட்டதாக கூறுகிறாராம். 12 வயதாக இருந்தபோது விளையாட்டாக பல்பு தின்ன தொடங்கிய பழக்கம் தற்போது விட முடியாத அளவுக்கு தொடர்கின்ற போதிலும், எந்தவித உடல் உபாதையும் அவருக்கு இல்லை என்பது விந்தையான விஷயமாகும்.

மாதத்துக்கு சராசரியாக 25 பல்புகள் வீதம் தின்றுவரும் வாங் ஜுன்னின் மனைவி இவரது இந்த பழக்கத்தால் அவரை விட்டே சென்று விட்டாராம். மனைவி போனது பற்றிக்கூட கவலைப்படாமல் மனிதர் பல்புகளை பதம் பார்ப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல