சனி, 11 செப்டம்பர், 2010

பிரசாந்தை ஏமாற்றி திருருமணம் செய்த கிரகலட்சுமியை பொலிஸ் தேடுகிறது

பிரபல்யமான டாக்டர் ரங்கபாஷ்யம் நடிகர் தியாகராஜனுக்கு 30 வருட கால நெருங்கிய நண்பர்...

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மனைவியின் அண்ணன் மகள்தான் கிரகலட்சுமி. பிரஷாந்துக்கு குடும்பபாங்கான பெண்ணை தேடுகிறார்கள் என்று அறிந்த கிரகலட்சுமி பிரஷாந்தை எப்படியாவது வளைத்து விட வேண்டும் என திட்டமிட்டார். நடிகர் தியாகராஜனை டாக்டர் ரங்கபாஷ்யம் மூலமாக கிரகலட்சுமி கடவுள் பக்தி நிறைந்தவள்.
நல்ல பண்புள்ள குடும்பப் பெண் என நம்ப வைத்தார்கள். டாக்டர் அளித்த உறுதியின் பேல் பிரஷாந்த் கிரகலட்சுமி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் கலை உலகமே திரண்டு வந்து திருமணத்தை நடத்தி வைத்தது.

கல்யாணம் நடந்த மறு வாரமே கிரகலட்சுமியின் சுயரூபம் வெளிப்பட்டது. கிரகலட்சுமியின் நடத்தை அனைவரையும் திடுக்கிட வைத்தது. இரவு வெகு நேரம் வரை வெளியே சுற்றுவது, குடித்துவிட்டு போதையில் வருவது போன்ற பல நிகழ்ச்சிகள் பிரஷாந்த் குடும்பத்தை அதிர வைத்தது. ஒரு மாதத்துக்கு பின் வயிற்று வலியால் அவதிப்படுவது போல நடித்து அம் மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என அடம்பிடித்து பிரஷாந்தை பிரிந்து கிரகலட்சுமி அவரது வீட்டுக்கு திரும்பி சென்று விட்டார். அதன் பிறகு பிளாக்மெயில் ஆரம்பமாகியது. ஐந்து கோடி ரூபாய் தரவேண் டும். இல்லையேல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக போலீஸில் புகார் செய்து உங்கள் அனைவரையும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் குடும்பத் தோடு கைது செய்ய வைப்பேன் என மிரட்ட ஆரம்பித்தார்.

ஐந்து கோடி கேட்டு மிரட்டிய கிரகலட்சுமியின் குடும்பத்தினர் தங்களது டிமாண்டை ஐம்பது கோடி ரூபாயாக உயர்த்தி கேட்க ஆரம்பித்தனர். பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த இக்கட்டான விவகாரத்தால் நிலை குலைந்து போயினர். செய்வது அறியாமல் திகைத்தனர். மிரட்டிக் கேட்டும் பணம் வராததால் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சணை கொடுமை என பொய்யான குற்றச்சாட்டை போலீஸில் புகார் செய்தனர் கிரகலட்சுமின் குடும்பத்தினர். தீர விசாரித்த போலிஸார் கிரகலட்சுமி அளித்த புகார் உண்மையானது அல்ல என அதை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையே கிரகலட்சுமியின் மற்று மொரு கபட நாடகம் அம்பலம் ஆனது.
கிரகலட்சுமி வேணு பிரசாத் என்பவரை 3 வருடங்கள் காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டதும் அவரோடு 4 வருடங்கள் குடும்பம் நடத்தியதும் அவர்களது திருமணம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதும் புலனாய்வு துறை கண்டுபிடித்து உண்மையை வெளிப்படுத்தியது. தன்னை ஏமாற்றிய கிரகலட்சுமியின் திருமணம் சட்டப்படி செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட் ஏற்கனவே திருமணம் ஆனது உறுதி செய்யப்பட்டதால் இந்த திருமணம் செல்லாது என குடும்பநல கோர்ட்டு உத்தர விட்டது. பிரஷாந்த் மறுபடியும் பிரம்மச்சாரி ஆனார். பிரஷாந்திடம் பணம் பறிக்கும் திட்டம் நடைபெறாததால் பெரிய கடனிலிருந்த கிரகலட்சுமியின் தந்தை தனசேகர் மனமுடைந்தார். மாரடைப்பால் அகால மரணமடைந்தார். கிரகலட்சுமியின் குடும்பத்தில் குழப்பம் குடியேறியது. கிரகலட்சு மிக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவன் நாகராஜ். இளையவன் பொன்குமார். மூத்த அண்ணன் நாகராஜின் முதல் மனைவி வர தட்சணை கொடுமையால் வீட்டை விட்டு சென்றார். நாகராஜ் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். பொன்குமாருக்கும் அபிராமி என்ற பெண்ணுக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெருத்த கடனிலிருந்து கிரகலட்சுமியின் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. பொன்குமார் மனைவி அபிராமியை பணம் கேட்டு கிரகலட்சுமியின் குடும்பத்தார் தொல்லைதர ஆரம்பித்தனர். தாங்க முடியாத துயரத்துக்கு ஆளான கிரகலட்சுமியின் அண்ணி அபிராமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிரகலட்சுமியின் அண்ணன் நாகராஜ் மீது மற்றொரு அண்ணனான பொன்குமார் என் மனைவியின் சாவுக்கு என் குடும்பத்தார்தான் காரணம் என போலிஸில் புகார் செய்ய இதை உறுதி செய்யும் விதம் அபிராமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலிஸார் கைப்பற்றி கிரகலட்சுமியின் அண்ணன் நாகராஜை புழல் ஜெயிலில் அடைத்தனர். கொலை கொடுமை கேஸிலிருந்து தப்பிக்க கிரகலட்சுமி மற்றும் அவரது தாயார் சிவகாமசுந்த தலைமறைவானார்கள். வக்கீல்கள் மூலம் முன்ஜாமின் கேட்டு கிரகலட்சுமி செய்த மனுவையும் கோர்ட் நிராகத்து தள்ளுபடி செய்தது. எந்த நேரத்திலும் போலிஸார் தலைமறைவாகியிருக்கும் கிரகலட்சுமியை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல பண்பான குணடைய வெள்ளை உள்ளம் படைத்த நடிகர் பிர ஷாந்தை பணமே குறிக்கோள் என திட்ட மிட்டு ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டிய கிரகலட்சுமியின் குடும்பம் சிக்கலில் சிக்கி தவிக்கும் இந்த அவல நிலை கடவுள் அவர்களுக்கு அளித்த சரியான தண்டனை என எல்லோரும் பேசிக் கொள்ளுகிறார்கள்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல