சனி, 11 செப்டம்பர், 2010

சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்கினால்....?

கிரிக்கெட் ஆட்டம் எப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சிக்கியுள்ள சூதாட்டப் புகார் பெருமளவு விவாதங்களையும், கருத்துக்க ளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்ற நீதிபதி ஒருவர் விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமõக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் வருமாறு: “கிரிக்கெட்டிலும், பிற விளையாட்டுகளிலும் சூதாட்டம் இப்போது பெருமளவு இருந்து வருகிறது என்பதைக் காண தெய்வீகக் கண்கள் தேவையில்லை. அதிலிருந்து பெருகும் பணம் போதை மருந்து கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றை நோக்கி திருப்பப்படும் நாட்கள் அதிக தூரம் இல்லை. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தக் குற்றத்தை சட்டபூர்வமாக்கி அதனை அரசுகள் கண் காணிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.“ என்கிறார்.

இவரது இந்த 'கவலை' யில் ஒரு அர்த்தம் இருப்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கு ஒரு குற்றத்தை சட்டபூர்வ மாக்கிவிட்டால் அது தீர்ந்து விடும் என்பதற்கு வரலாற்றில் எந்த வித ஆதாரம் இல்லை.

இது போன்ற சிந்தனை ஒரு பெரிய விஷயமாக சிறிது காலமாகவே பல்வேறு தரப்பிலும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20, 000 கோடி சூதாட்டப்பணம் புழங்கியுள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. டெல்லியில் மட்டும் 2000 3000 சூதாட்டக்காரர்கள் திறம்பட சட்ட விரோத சூதாட்டத்தை நடத்தியுள்ளனர் என்று இதே நீதிபதிதான் கூறுகிறார். ஆனால் காவல் துறைக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய் ப்பில்லை என்று மிகச்சரியாகவே கூறும் அந்த நீதிபதி அதற்காக காவல்துறையைக் கடிந்துள்ளார்.

இருவர் விளையாடினால் அருகில் இருக்கும் இருவர் யார் வெற்றி பெறுவார் என்றோ எவ்வளவு பெட்? என்று கூறிகொண்டு சில தொகைகளை பந்தயமாகக் கட்டி விளையாடுவது சில இடங்களில் மிகவும் சகஜமான ஒரு வாழ்க்கை நிலை.

இது எப்போது அபாயம் என்றால் பெட் கட்டுபவர்கள் ஆடுபவர்களை சரிக்கட்டத் தொடங்கும்போதுதான். ஆனால் கிக்கெட், கால்பந்தாட்டம், ஹொக்கி இன்ன பிற திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுகளில் புகுந்து விளையாடி வீரர்களை பணத்தாசை காட்டி பணத்தைக் குவிக்கும் சூதாட்டக்காரர்கள், மற்றும் நிறுவனங்கள்தான் இப்போது நம் பிரச்சினை.

நாம் வாழும் இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் மனிதனை மழுங்காமல் இருக்கச் செய்வது விளையாட்டிற்கும் பெரும் பங்கு உண்டு. அது வெறும் விளையாட்டு மட்டு மல்ல, அது ஒரு பண்பாடு. இதில் விளையாட முடியாத, விளையாட்டில் தங்கள் உடலை ஈடு படுத்த முடியாத பண முதலைகள் புகுந்து கெடுப்பது என்பது விளையாட்டை மட்டும் கெடுப்ப தல்ல, பண்பாட்டையும் கெடுப்பது ஆகும்.

எனவே டெல்லி விசாரணை நீதிமன்ற நீதி பதியின் சூதாட்டச் சட்டமாக்கல் பரிந்துரை எந்த விதத்திலும் இந்தத் தீமையைக் களைய உதவாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல