Nightmare: An Italian mother and her baby are both in critical condition at this hospital, the Messina Polyclinic in Sicily, after an argument between doctors delayed an emergency Caesarean
கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்க மருத்துவர்களோ அவருக்கு எவ்வாறு பிரசவம் பார்ப்பது எனச் சண்டையிட்டு பிரசவத்தை தாமதப்படுத்தி தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் இத்தாலியின் சிசிலி பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
மெஸினா (Messina) அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோரா சல்பீட்ரோ (Laura Salpietro) என்ற மேற்படி கர்ப்பிணித் தாய்க்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு குழந்தையை எடுப்பதா அல்லது சாதாரண பிரசவத்துக்கு அனுமதிப்பதா என்பது தொடர்பில் அவரது குடும்ப வைத்தியருக்கும் மருத்துவமனையில் கடமையிலிருந்த மருத்துவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
முரண்பாடு வாய்த் தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்தது.
மருத்துவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் பிரசவம் ஒரு மணி நேரத்தால் தாமதமானதால் குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழந்தைக்கு எதிர்கா லத்தில் இருதய நோய்களும் ஏற்படலாம் என மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
Criminal charges: The two suspended gynaecologists are facing an investigation, with Health Minister Ferruccio Fazio calling it a 'serious matter' and 'unforgivable'
உரிய நேரத்தில் பிரசவத்தை மேற்கொள்ளாததால் தாயின் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு அதனை அகற்ற நேர்ந்ததாக கூறப்படுகிறது.
அந்தோனியோ என பெயர் சூட்டப்பட்டுள்ள மேற்படி குழந்தையின் தந்தை மெற்றியோ மொலோனியா இந்த சம்பவம் குறித்து கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசாங்க மருத்துவமனையொன்றில் நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் பெர்ரூசியோ பேஸியோ (Ferruccio Fazio) மருத்துவமனைக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று லோராவிடம் இந்த விவகாரம் தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதன்போது மருத்துவர்களின் அஜாக்கிரதை நடத்தையால் லோராவுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் தன்னால் இயன்ற பரிகாரத்தை செய்யுமென சுகாதார அமைச்சர் லோரா வுக்கு உறுதியளித்துள்ளார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 5 மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக