வியாழன், 2 செப்டம்பர், 2010

பிரான்ஸ் முதல் பெண்மணி கார்லா புரூணிக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் ஈரான் பத்திரிகை

பிரான்ஸ் முதல் பெண்மணி கார்லா புரூணிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஈரானிய கடும் போக்கு தினசரி பத்திரிகையொன்று செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

இப்பத்திரிகை ஏற்கனவே கார்லா புரூணி யை ஒரு விலைமாது என குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணவனுக்கு தெரியாமல் பிறிதொரு ஆணுடன் காதல் தொடர்பை வைத்திருந்து கணவனை படுகொலை செய்வதற்கு உதவி புந்த குற்றச்சாட்டில் கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றத்தை எதிர் கொண்டிருக்கும் இரு பிள்ளைககளுக்கு தாயான சுகினெஹ் அஷ்தியானிக்கு (43 வயது) ஆதரவாக குரல் கொடுத்தமைக்காக ஈரானிய கடும் போக்காளர்களின் கடும் சினத்துக்கு கார்லா புரூணி ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் “த கேஹன்' என்ற மேற்படி தினசரி “மனித உமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள பிரான்ஸ் விலை மாதுகள்' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் கார்லா புரூணியை ஒரு விலை மாது என குறிப்பிட்டிருந்தது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் ““கார்லா புரூணியின் விபசார பின்னணி வாழ்க்கையையும் ஈரானிலுள்ள சோரம் போன பெண்ணுக்கு ஆதரவு வழங்குவதையும் கருத்திற் கொள்ளும் போது, அவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு உட்பட வேண்டிய ஒருவராவார்'' என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஈரானிய வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ரமின் மெஹ்மன்ப ராஸ்ட் விபரிக்கையில், ““ஏனைய நாடுகளிலுள்ள முக்கியஸ்தர்களை அவதூறு செய்வதையும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை கையாளுவதையும் ஈரானிய இஸ்லாமிய குடியரசு அங்கீகரிக்கவில்லை'' என தெரிவித்தார்.

பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் பெர்னார்ட் வலேரோ விபரிக்கையில், ““ஊடகங்களுக்கு கொள்கைகள் மற்றும் மனோபாவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டவும் ஏனைய நாடுகளை விமர்சிக்கவும் முடியும். ஆனால் இவ்வாறு அவதூறு செய்வதும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை கையாள்வதும் சரியானவையென நாம் கருதவில்லை'' என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல