வியாழன், 2 செப்டம்பர், 2010

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு நானே பொறுப்பு

கியூப புரட்சியின் பின் அந்நாட்டில் தன்னின சேர்க்கையாளர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டமைக்கு தனக்கு மிகுந்த பொறுப்பு இருப்பதாக முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

1960 களிலும் 1970 களிலும் கியூபாவில் பல தன்னின சேர்க்கையாளர்கள் சுடப்பட்டும் சிறையிலடைக்கப்பட்டும் மீள் கல்வியூட்டல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டும் வந்தனர்.

தன்னின சேர்க்கையாளர்கள் கியூபாவைப் பொறுத்தவரை ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு வந்ததாக தெரிவித்த பிடெல் காஸ்ட்ரோ, தன்னின சேர்க்கை சமூகத்துக்கு எதிராக என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பில் தான் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

அச்சமயத்தில் தமக்கு எதிராக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்கள் உள்ளடங்கலான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாகவும் இந்நிலையில் தன்னின சேர்க்கையாளர்களின் விவகாரம் தமது கவனத்தை ஈர்க்கத் தவறி யிருந்ததாகவும் பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

மெக்ஸிக்கோ பத்திரிகையான லா ஜொர்னாடோவுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல