வியாழன், 2 செப்டம்பர், 2010

கடாபியின் பகல் கனவு

ஐரோப்பா இஸ்லாத்துக்கு மாறவேண்டும்

ஐரோப்பா இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள லிபிய தலைவர் முகம்மார் கடாபி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் காலனி ஆட்சி நாடான இத்தா லியுடனான நட்புறவு உடன்படிக்கையொன்றின் இரண்டாவது ஆண்டு விழாவை யொட்டி ரோமுக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவரது இந்த விரிவுரையை செவி மடுப்பதற்கு முகவர் நிலையமொன்று கட்டணம் செலுத்தி சுமார் 500 பெண்களைக் கொண்ட குழு வொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“முழு ஐரோப்பாவுக்குமான சமயமாக இஸ்லாம் விளங்க வேண்டும்' என கடாபி கூறியதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட யுவதிகளில் ஒருவர் இத்தாலிய ஊடகமொன்றுக்கு பேட் டியளித்துள்ளார்.

இந்நிலையில் கடாபியின் இந்த உரையானது இத்தாலியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல