அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பவுல் மெக்காலே (Paul McLeay). இவர் துறைமுகம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.பியாக. தேர்வு செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றார்.
இந் நிலையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தங்கள் அலுவலக விபரங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தள இணைப்புடன் கணனி வழங்கப்பட்டிருந்தது.
அப்படி வழங்கப்பட்ட அலுவலக கணனியில் பவுல் மெக்காலே ஆபாசப் படம் பார்த்துக் கொண்டி ருந்ததாகவும், இணையத்தள வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. கையும் களவுமாகச் சிக்கிய அமைச்சர் உடடினயாகப் பதவி விலகினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக