வான் டோரன்
பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் கிளாட்மான்ஸ் (25), வான் டோரன் (37). இரண்டு பெண்களும் பாராசூட் மூலம் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தவர் 25 வயதுள்ள மார்சல். வான் டோரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்களுமே மார்சலை விரும்பி உள்ளனர். ஆனால், மார்சலுக்கு வான் டோரன் மீது விருப்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கிளாட்மான்ஸ் பொறாமையில் இருந்தார்.
கடந்த 2006ம் நவம்பரில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சிக்கு இருவரும் தயாராயினர். அதன்படி, வானில் இருந்து இருவரும் குதித்தனர். சுமார் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்த போது, கிளாட்மான்சின் பாராசூட் எந்த பிரச்னையும் இன்றி விரிந்து கொண்டது. ஆனால், வான் டோரனின் பாராசூட் விரியவில்லை. அவர்கள் வானில் இருந்து குதிப்பதை கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மார்சல் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்கை டைவர்கள் இருவரும் வானில் குதிக்கும் காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் பார்த்த போது, பாராசூட்டை விரிக்க வான் டோரன் போராடுவது நன்கு தெரிந்தது. அனைவரும் என்ன நடக்குமோ என்ற பீதியில் காத்திருந்தனர். கடைசி வரை பாராசூட் விரியவில்லை. வானில் பல பல்டிகள் அடித்தபடி பெல்ஜியத்தின் லிம்பர்க் நகர் மைதானத்தில் வான் டோரன் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கிளாட்மான்ஸ்
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வான் டோரனின் பாராசூட் கிழிக்கப்பட்டிருந்ததும், வானில் விரியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வீடியோ காட்சிகளும் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த சதியில் ஈடுபட்டதாக கிளாட்மான்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறுத்த அவர், கடந்த 2008ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். வழக்கு தொட ர்ந்து நடக்கிறது.
தன்னை விரும்பாமல், 37 வயதான, திருமணமான, 2 குழந்தைகளுக்கு தாயான வான் டோரனை பயிற்சியாளர் மார்சல் விரும்புகிறாரே என்ற பொறாமையில் திட்டமிட்டு கொலை செய்ததாக கிளாட்மான்ஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தாரும், வக்கீலும் கூறுகையில், ‘‘கடந்த 2008ல் ஜாமீனில் வெளிவந்த பிறகு கிளாட்மான்ஸ் இயல்பாக இருக்கிறார். அவரது நடவடிக்கைகள் எதுவும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இல்லை. மேலும், அவர் ஆசிரியராக இப்போது பணிபுரிகிறார்Ó என்று தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக