திங்கள், 27 செப்டம்பர், 2010

சமையலறை டிப்ஸ்

எலுமிச்சை பழத்தினை லேசாக தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

வாழைப்பூ, போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தின் தோலை, எளிதாகக் கண்ணீர் வராமல் உரிக்க சின்ன வெங்காயத்தில், மேல் பகுதியையும், அடிப்பகுதியையும் வெட்டி விட்டு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்தால் மிகவும் எளிதாக உரிக்கலாம்.

குளிர் நாடுகளில் வசிப்பவர்கள், சீசனுக்கு மட்டுமே புதினா கிடைக்கும். புதினாவை நைசாக அரைக் காமல், ஒன்றும் பாதியுமா அரைத்து சிறிய ப்ரீசர் பேக்குகளில் போட்டு வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்திருந்து உபயோகிக்கலாம். தேவையான போது சிறிதளவு வெட்டி எடுத்து சமையலில் சேர்க்கலாம். சுவை மாறாமல் இருக்கும். கொத்தமல்லி அத்தனை பிரெஷ்ஷாக இருக்காது. வேண்டுமானால் புதினாவையும், கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

தேங்காயை ப்ரீசரில் ஸ்டோர் செய்யும்போது, தேங்காயைப் பல்லாக வெட்டி ஸ்டோர் செய்வதைக் காட்டிலும், துருவி கொண்டு வைத்தால் எப்பொதும் பிரெஷ்ஷாக இருக்கும். தேங்காய்ப் பல்லாக ப்ரீசல் வைத்து உபயோகப்படுத்தும்போது அதன் வெளிப்புறம் சீக்கிரமே ஒரு பிசின் போன்று வழவழப்பாக ஆகிவிடும். துருவி வைக்கும் போது அப்படி ஆகாது. மேலும் பொரியல், சட்னி என்று உடனடியாக உபயோகப்படுத்தலாம்.

இயற்கையான அழகுடன் முகம் எப்போதும் பளப்பளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவில் பாதாம், பப்பாளி சேர்த்துக் கொள்ளலாம். மேலும் குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவவேண் டும். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே பருத்தொல்லை அதிகம் இருக்காது. அசைவம் சாப்பிடுபவர்கள் மீனை அதிகம் சேர்த்துக் கொண்டால் எப்போதும் தெளிவான சருமத்துடன் இருக்கலாம்.

செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள் ஒவ்வொரு உணவிற்கு பின்பும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் உணவு எளிதாக ஜீரணமாகி, செரிமான கோளாறுகள் நீங்கிவிடும்.

பிளாக் டீயில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது வயிற்றுப் போக்கையும், அதனால் ஏற்படும் வயிற்று வலியையும் உடனே சரி செய்து விடும். மேலும் டீயை இப்படி பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மிகவும் நல்லது. அதே சமயம் வயிற்றில் புண், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் கோப்பி, தேநீரை தவிர்ப்பது அவசியம். தக்காளி கீரை, மோர், பாசிப்பருப்பு முதலியவை அவர்களுக்கு ஏற்ற உணவு பொருட்கள். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல