திங்கள், 27 செப்டம்பர், 2010

பெண்மையை ஆய்தமாக பயன்படுத்திய ரஷ்ய உளவாளி

ரஷ்ய பெண் உளவாளி அன்னா சாப்மன், தனது பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தியதாக, அவரது முன்னாள் காதலர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பெண் உளவாளியான அன்னா சாப்மன், அமெரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். தனது அழகால், மனிதர்களின் மனங்களை வீழ்த்திய அன்னாவுக்கு, "கவர்ச்சி உளவாளி' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும், தனது பெண்மையை, உளவு வேலைக்கு மிகச் சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியதாக அவரது முன்னாள் காதலர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அன்னாவின் மூன்று முன்னாள் காதலர்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். டென்னிஸ் இர்டிட் என்பவர் கூறியதாவது: எதிராளியிடம் தனக்கு வேண்டிய தகவல்களை பெறுவதற்கு, அன்னா தனது பெண்மையை மிகப் பெரிய ஆயுதமாக கையாண்டாள். அதற்காக, அவள் எந்த எல்லைக்கும் போவாள்.


ஆனால், அன்னாவின் ஆரம்ப கட்ட காதல் விளையாட்டுகளான, சிறிய தொடுகை, காதுமடல் அருகே ரகசியமாக கிசுகிசுப்பது, கைகோர்த்துக் கொள்வது, எதேச்சையாக படுவது போன்று உதடுகளால் உதடுகளை உரசுவது போன்றவற் றால், எதிராளி ஆரம்பத்திலேயே கவிழ்ந்துபோவான். இவ்வாறு இர்டிட் கூறினார்.


ஆன் - லைன் ரியல் எஸ்டேட் வணிகம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பில் சான்போர்டு கூறுகையில், அன்னாவைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவளின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தாலே, டீன் - ஏஜ் இளைஞர்கள் முதல், வயது முதிர்ந்தவர்கள் வரை காதல் வயப்பட்டுவிடுவர். அவளது சிவந்த கூந்தலும், உடல் அமைப்பும், அங்க அசைவுகளுமே என்னை கவர்ந்தன. தனது பணியின் நிமித்தமாக, அவள் மற்றவர்களுடன் செயற்கையான உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம், ஆனால், அவள் என்னிடம் உண்மையாக இருந்தாள் என்று தெரிவித்துள்ளார். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல