புதன், 27 அக்டோபர், 2010

102 சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர்

பிரித்தானியாவின் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளியாக கருதப்படும் வாடகைக் கார் சாரதியான ஜோன் வொர்போய்ஸ் என்ற நபர், 102 பெண்களை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தென்கிழக்கு லண்டனிலுள்ள ரொதெர் ஹித் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் வொர்போய்ஸ் (53 வயது) என்ற இந்த நபர், தனது வாடகைக் காரில் சிறுமிகளையும் பெண்களையும் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தனது வாடகைக் காரில் ஏறும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் போதைப்பொருளை ஏற்றியே அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

30 க்கு மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஜோன் வொர்போய்ஸ் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரால் பாதிக்கப்பட்ட 90 ஆவது பெண் தொடர்பான வழக்கு திங்கட்கிழமை பிரித்தானிய பிறவுண் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

ஜோன் வொர்போய்ஸால் 200 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல