சம்பவ தினம் இரவு வேளையில் அழுத குழந்தைக்கு பால் புகட்ட பால் போத்தலை தயார் செய்யும் நடவடிக்கையில் நிர்வாணக் கோலத்தில் ஈடுபட்ட ஆபிரிக்க வம்சாவளி ஆணொருவராலேயே இந்த பிரச்சினை ஆரம்பமானது.
இருளில் நிர்வாணக் கோலத்தில் கன்னங்கரேலென்று இருந்த மேற்படி ஆணைக் கண்டு அவரின் மனைவி பயத்தில் பிசாசு என கத்தியுள்ளார்.
வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் மேற்படி அலறலால் திடுக்கிட்டு விழித்தெழுந்து பிசாசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மாடியிலிருந்து குதித்துள்ளனர்.
அவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்களுக்கும் குறிப்பிட்ட ஆணுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்துள்ளது.
இந்த மோதலில் கத்திக்குத்து காயத்துக்கு ஆளான மேற்படி ஆணும் அவரது கைக்குழந்தையõன மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தந்தையான ஆணின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய போதும், குழந்தையின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக