புதன், 27 அக்டோபர், 2010

இத்தாலிய நகரில் குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்க திட்டம்

இத்தாலிய கடற்கரைப் பிராந்திய நகரொன்று கட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பொது இடத்தில் பண்பாட்டு நியமத்தராதரங்களைப் பேணும் முகமாகவே கஸ்டெல் லாமரே டி ஸ்ரபியா என்ற மேற்படி நகரின் மேயர் லுயிலி பொப்பியோ இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் இந்த நகரில் குட்டைப் பாவாடைகள், குட்டை காற்சட்டைகள் உட்பட அநாகரிகமான உடைகளை அணிபவர்கள் 25 யூரோ (35 அமெக்க டொலர்) முதல் 500 யூரோ (696 அமெரிக்க டொலர்) வரையான தண்டப்பண விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டு மல்லாது பொது இடங்களில் சூரிய குளியலில் ஈடுபடுவதற்கும் உதைப்பந்தாட்டம் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த தடை தொடர்பான வாக்கெடுப்பு நகர சபைக் கூட்டத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

மேற்படி திட்டம்தொடர்பில் உள்ளூர் மதகுருவான டொன் பொலோ செசெரே விபரிக்கையில், ““இது நல்ல தீர்மானம் என்றே கருதுகிறேன். இது அதிகரித்து வரும் பாலியல் முறை கேடுகளை தடுக்க உதவும்'' என்று கூறினார்.

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியின் அரசாங்கத்தால் குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டம், சமூக நடத்தை என்பன தொடர்பில் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக கஸ்டெல்லாமரே டி ஸ்ரபியா விளங்குகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல