இத்தீர்ப்பிற்கு, வத்திக்கான் பாப்பரசரின் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வத்திக்கான் செய்தித்தொடர்பாளர் பெடரிகோ லொம்பர்டி கூறுகையில், `மரண தண்டனை குறித்த வத்திக்கானின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததுதான். எனவே, தாரிக் அஅஸிஸுகு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்று நம்புகிறோம். இதனை தடுத்து நிறுத்துவதற்காக, நாம் அனைத்து வகையான ராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
இந்த தண்டனை கைவிடப்பட்டால்தான், ஈராக்கில் சமாதானமும், அமைதியும் தழைக்க முடியும்' என்றார்.
சதாம் ஹூசெயின் ஆட்சியில் இருந்த அமைச்சர்களில் இவர்மட்டும் தான் கிறிஸ்துவ மதத்தைச்சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக