மிசெலி கலினா (44 வயது) என்ற மேற்படி பெண் தனது கணவர் மூலமும் காதலர் மூலமும் கருத்தத்த ஆறுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை மறைத்ததாக கூறப்படுகிறது.
மூடப்பட்ட பிரத்தியேக அறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு எச்சங்களை மரபணு பசோதனைக்குட்படுத்தியபோது, அவை உயிருடன் பிறந்த 4 குழந்தைகள் உட்பட 5 குழந்தைகளுக்கு சொந்தமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளில் 4 குழந்தைகளில் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையின் பிரகாரம் அவற்றில் மூன்றிற்கு மிசெலி கலினாவின் நீண்டநாள் காதலரே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.
ஐந்தாவது குழந்தைக்கு யார் தந்தை என்பதை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை இன்னும் பூர்த்தியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மிசெலி கலினாவின் கணவரும் மகளும் அவரது முடப்பட்ட பிரத்தியேக அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சடல எச்சங்களை அவ தானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் மிசெலி கலினாவின் அறையில் காணப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் மனித பிறவிக்கு சொந்தமானவை என்பதை பொலிஸார் நம்பவில்லை. அதனால் அவற்றை வீசும்படி கூறி விட்டு சென்றுவிட்டனர்.
தொடர்ந்து மிசெலி கலினாவின் கணவரும் மகளும் குறிப்பிட்ட அறையில் குளிர்சாதனப் பெட்டியொன்றிலும் சீமெந்தால் அடைக்கப்பட்டு பெட்டி ஒன்றில் வைக்கப் பட்ட நிலையிலும் எலும்புக்கூட்டு எச்சங்கள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.இதனையடுத்தே விசாரணை ஆரம்பமானது.
தனது பிரத்தியேக அறைக்குள் பிரவேசிப்பதற்கு குடும்பத்தில் இருந்த எவருக்கும் மிசெலி கலினா அனுமதி அளிக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு சமயம் கர்ப்பமடையும் போதும் தனது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு கருப்பைக் கோளாறே காரணம் என அவர் தனது கணவருக்கும் காதலருக்கும் தெரிவித்து வந்துள்ளார்.
குழந்தைகளின் சடல எச்சங்களை பரிசோத னைக்குட்படுத்திய போது , அக்குழந்தைகள் மூச்சுத் திணறடிக்கப்பட்டும் நஞ்சூட்டப்பட்டும் அலட்சியமாக கைவிடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி வழக்கில் ஆஜராகிய பேர்க் பிராந்திய மாவட்ட சட்டத்தரணி ஜோன் அடம்ஸ் கூறினார்.
மிசெலி கலினா தனது காதலருடனான தகாத பாலியல் தொடர்பு மூலம் 2003 ஆம் ஆண்டும் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார்.எனினும் அவர் அக்குழந்தையை தத்துக் கொடுத்துள்ளார்.
அவருக்கு தனது கணவர் மூலம் ஏற்கனவே 19 வயது மகள் உள்ளார். அவர்களுக்கு பிறந்த மகனொருவர் 2000 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக