செவ்வாய், 19 அக்டோபர், 2010

24 மணி நேரத்தில் இரண்டு முறை திருமணம் செய்த பாக்கிஸ்தானியர் (படங்கள் இணைப்பு)

திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளை அசார்
முல்தான் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் அசார் ஹைத்ரி, 21 வயது ருமானா அஸ்லமை உயிருக்கு உயிராக காதலித்தார். பிரச்னை என்னவென்றால், அசார் சிறுவயதாக இருந்தபோது ஹுமைரா காசிம் என்ற சிறுமியை அவர்களின் குடும்பத்தினர் நிச்சயித்து, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துவிட்டர்கள்.

அசார் தான் காதலித்து வந்த காதலியை திருமணம் செய்து கொண்டால், ஹுமைரா காசிம் குடும்பத்தினருக்கும் அசார் குடும்பத்திற்குமிடையே கடும் பகை ஏற்படும். பாகிஸ்தானில் கூடுதலாக திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களே அவர்களின் கலாச்சாரமாக இருந்து வருகிறது. அதன்படி, இத்திருமணத்தால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும் என அசாரின் குடும்பத்தினர் மிகவும் அச்சம் கொண்டிருந்தார்கள்.

இச்சமயத்தில், அசார் தான் இரண்டு பெண்களையும் மணந்து கொள்வதாக சொன்ன யோசனையை அந்த இரு பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்ச்சியுடன் ஏற்றுக்கொணடனர்.

அதன்படி, முதல் நாள் தனக்கு சிறுவயதில் நிச்சயித்த பெண்னை மணந்தபின், மறுநாள் தனது காதலியை மணந்து கொண்டார்.

இச்சம்பவம் பாக்கிஸ்தான் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல