செவ்வாய், 19 அக்டோபர், 2010

இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இறந்தது

பங்களாதேசில் கேசோப்பூர் நகரில் வசித்து வந்த மிகவும் கஸ்டமான பொருளாதார சூழ்நிலையில் உள்ள 22 வயது குடும்ப பெண்ணிற்கு 2 தலைகளுடன் ஒரு குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையின் பெயர் கிரோன் ஆகும்.

ஆரம்பத்தில் இருந்து அக்குழந்தை நன்றாகவே இருந்தது. அக்குழந்தையின் தலையை பிரித்து எடுக்க பங்களாதேஸ் தலைநகர் டாக்காவிற்கு குழந்தையை எடுத்துச் செல்லுமாறு அக்குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

பெற்றோர்கள் தங்களிடம் செலவு செய்ய போதிய பணமில்லாததால் அவர்கள் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஓரிரு நாட்களின் பின்னர் அக்குழந்தைக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டு மறு நாளே அக்குழந்தை இறந்து போய்விட்டது.

இக்குழந்தை பிறந்த செய்தி கேட்டு நாடளாவிய ரீதியில் சுமார் 150000 பேர் கேசோப்பூர் நகர மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்துச்சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல