செவ்வாய், 19 அக்டோபர், 2010

இமயமலையில் ரஜனி


“எந்திரனின்' இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த். இந்தப் பயணத்தின் போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.கடந்த இரு ஆண்டுகளாக “எந்திரன் படப்பிடிப்பிற்காக மிகவும் பரபரப்புடன் இருந்த ரஜனிக்கு, அவர் வருடந்தோறும் மேற்கொள்ளும் இமயமலைப் பயணத்தை தள்ளிப்போட்ட வேண்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது “எந்திரன்' வெளியாகி உலகம் முழுவதும் சாதனை படைத்து வருவதினால், தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார் ரஜனிகாந்த்.

மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்ததைத்தொடர்ந்து பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார்.

தீபாவளிக்கு முன் சென்னை திரும்பும் அவர், ரசிகர்களைச் சந்தித்து மகள் திருமணம் மற்றும் “எந்திரன்' வெற்றிக்காக சிறப்பு விருந்தளிக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல