செவ்வாய், 19 அக்டோபர், 2010

நாய்களுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டும் மாடு (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவைச் சேர்ந்த பண்ணையொன்றைச் சேர்ந்த மாடொன்று இரு நாய்களுடன் நட்புறவுடன் பழகி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

4 மாத வயதாக இருக்கும் போது நாய்களுடன் சேர்ந்து வளர்ந்த ஹென்றி என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த மாடு நாய்களுடன் விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளது.

அத்துடன் நாய்களைப் போன்று குரைக்க முயற்சிக்கும் ஹென்றி நாய்களின் உண வையும் உண்பதிலும் நாட்டம் காட்டுவதாக கூறப்படுகிறது.

டொர்ஸெட் நகரில் ஸ்வனோஜ் எனும் இடத்திற்கு அருகிலுள்ள மேற்படி பண்ணையின் உரிமையாளரான பென் போவர் மான் விபரிக்கையில், ““ஹென்றி தன்னை ஒரு நாயென்றே கருதுகிறான். நாய்களைத் துரத்தி விளையாடுவதிலும் நாய்களைப் போன்று பின்னங் கால்களில் நிற்பதிலும் அவன் ஆர்வம் காட்டுகிறான்''

வீட்டின் அருகிலுள்ள குடிசையில்  அது உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறது.

அது எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.

எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது.  எனவே அது இன்னும்  10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்' எனத்தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல