செவ்வாய், 19 அக்டோபர், 2010

‘பொஸ்’ உடன் ஒத்துழைத்தால் உயர்பதவி

ஆணோ, பெண்ணோ, நிறுவன உயரதிகாரியுடன் உடல்ரீதியாக ஒத்துழைக்கும் ஊழியருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் மனிதவள அமைப்பான தி அடெக்கோ குரூப் “பெஸ்ட் பொஸ்’’ குறித்து ஆய்வு செய்தது. நிறுவனங்களில் பணிபுரியும் 17 சதவீதம் அமெரிக்கர்கள், தங்கள் மேலதிகாரிக்கு உடல்ரீதியாக ஒத்துழைப்பு கொடுத்தால் உயர் பதவி அடைய முடியும் என்று கருதுகின்றனர். ஆய்வில் கலந்துகொண்ட 7 சதவீதம் பேர் இதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் 3ல் ஒரு பங்கு ஊழியர்கள் தங்கள் மேலதிகாரி அழகாக இருப்பதாக தெரிவித்தனர். அமெரிக்காவின் பெஸ்ட் பொஸ் பட்டியலில் டாக் ஷோ புகழ் ஓப்ரா வின்பிரே 40 சதவீத வாக்குடன் முதலிடத்தை பிடித்தார். அதிபர் ஒபாமா 35 சதவீதம், டொனால்டு ட்ரம்ப் 28 சதவீதம் பெற்று அடுத்த இடங்களை பிடித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல