சனி, 16 அக்டோபர், 2010

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவார்களை தடுக்க வேண்டாம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அமெரிக்க இராணுவத்தில் இணைவதைத் தடுக்க வேண்டாம் என பென்டகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் ' டோன்ட் ஆஸ்க்', ' டோன்ட் டெல் ' ( Don't Ask, Don't Tell) சட்டமானது, அமெரிக்க இராணுவத்தில் ஓரினச் சேர்க்கையைத் தடுக்கின்றது. இது நீதிக்கு புறம்பானதென நீதிபதி வெர்ஜினியா பிலிப்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதன்படி வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தாதவரை இராணுவத்தில் பணியாற்றமுடியும். இல்லாவிடின் அவர்கள் வெளியேற்றப்படுவர்.

இச்சட்டமானது தற்போது சேவையில் உள்ள இராணுவ வீரர்களினதும் எதிர்கால வீரர்களினதும் அடிப்படை உரிமைகளை மீறுமென பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயமானது பல சர்ச்சைகளை அமெரிக்காவில் கிளப்பியிருந்தது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வீரர்களிடையே ஓரினச் சேர்க்கையைத் தடுக்க வேண்டாமெனக் கோரி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல