சனி, 16 அக்டோபர், 2010

இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு - மஹிந்தவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்து!

இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான தருணம் என இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

காமன்ல்வெல்த் போட்டிகளின் நிறைவுநாள் வைபவங்களில் கலந்துகொண்டுவிட்டு, இந்திய பிரதமரின் மதிய போசன விருந்துபசாரத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.

இதன் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு விரைந்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முகாம்களில் எஞ்சியுள்ள தமிழ் மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துமாறும், பொதுத்தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், அரசியல் தீர்வு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதன் போது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மஹிந்த, தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள நிதி எந்த விதத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.

இதேவேளை ஜனாதியபதியுடன் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேச்சுச்களை நடத்தினார்.

இதேவேளை தமிழர்களின் மீள் குடியேற்றம் குறித்து பார்வையிட இம்மாத இறுதியில் இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று கலை, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர்களை மன்மோகன் சிங் சந்தித்து வாழ்த்திய போது மகிந்த ராஜபக்சவும் உடனிருந்தார். அப்போது இலங்கை சார்பில் பதக்கம் வென்றவர்களை சந்தித்து உரையாடினார்.

நேற்று மாலை விஷேட விமானம் மூலம் கொழும்பு திரும்பினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல