துல்லுபஸ்கட் என்ற கிராமத்தில் பிறந்த கஜேந்திரா, உலகின் சிறிய மனிதராக ஏற்கனவே ஊடகங்களில் அறிமுகமானார். எனினும், மைனர் என்ற காரணத்தால் கின்னஸ் அமைப்பு அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை. 18 வயது முடியும் நாளுக்காக காத்திருந்தது.
இந்நிலையில், கஜேந்திராவின் பிறந்த நாள் நேற்று பொகாரா நகரில் கேக் வெட்டி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவர் நேற்று 18 வயதை நிறைவு செய்தார். இவரது பிறந்த நாள் விழாவில் கின்னஸ் அமைப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கஜேந்திராவின் உயரம் 67 செ.மீ. எடை 6.5 கிலோ. அதாவது 6 மாத குழந்தையின் எடை தான். இதை உறுதி செய்த கின்னஸ் அதிகாரிகள், உலகின் மிகச் சிறிய மனிதராக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
எஜுவார்டோ நினோ ஹெர்னாண்டஸ்
இதுவரை கொலம்பியாவைச் சேர்ந்த 24 வயது எஜுவார்டோ நினோ ஹெர்னாண்டஸ் என்பவர் தான் உலகின் மிகச்சிறிய மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளி உள்ளார் கஜேந்திரா.













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக