திங்கள், 29 நவம்பர், 2010

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் கொலை (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் கடைத்தொகுதி ஒன்றை நடத்தி வந்த 48 வயதுடைய இலங்கையரான சுப்பபையா தர்மசீலன் என்பவர் கொள்ளையர்களால் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடைத்தொகுதியின் மேல் வீட்டில் உயிரிழந்தவரின் மகள் பாதுகாப்பு கமராவிலே தனது தந்தையாரை கொள்ளையர்கள் மிரட்டி பணம் பறிக்க முற்பட்டு வருவதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் கொள்ளையர்கள், குறித்த இலங்கையரை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தனது தந்தையாரை கொள்ளையர்கள் மூன்று முறை கத்தியால் வயிற்றில் குத்தியதாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட பவுன்ஸ் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அயலில் உள்ளவர்கள் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்ட நேரத்தில் கடையினுள் இருந்து நால்வர் சந்தேகப்படும் விதமாக ஓடிச்சென்றார்கள் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கமராவை பார்த்த பொலிஸார் இருவரை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இருபது வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல