சார்ளி ஹோன்ட் என்ற குழந்தை கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டதனாலும் மூர்க்கமாக தாக்கப்பட்டதாலும் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடயவர் என டெரன் நிவ்டன் என்பவரை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இக்குழந்தையின் தாயாரும் நிவ்டனின் காதலியும் வீட்டில் இல்லாதபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனியாக இருந்த குழந்தை அழுததைக்கூட பொருட்படுத்தாமல் அதன் தலையில் 12 தடவைகள் தாக்கியது மட்டுமல்லாமல் காலினால் எட்டி உதைத்துமுள்ளார். இவரது கையடக்கத் தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி அதனை சோதனையிட்டபோதே அக்கொடூர காணொளிக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.
இக்காட்சியை பொலிஸார் நீதிபதிகளிடம் காட்டிய போது அவர்களும் கலங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருவாரங்களுக்குப் பின்னர் மீண்டும் அக்குழந்தையை தாக்கியதாலேயே அக்குழந்தை இறந்துள்ளது.
மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டமை மற்றும் பார்வை நரம்புகள் சேதமடைந்தமை ஆகியவையே மரணத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் குற்றங்களுக்கான தீர்ப்பு இன்னும் 3 வாரங்களில் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக