ஞாயிறு, 21 நவம்பர், 2010

அதிர்வால் பதற்றம்

வடமராட்சி மற்றும் தென் மராட்சி பகுதிகளில் நேற்றுப் பிற்பகல் வேளைகளில் பூமி அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 நிமிட இடைவே ளையில் இந்தப் பகுதியில் உள்ள வீடுகள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர். ஏற்கனவே குடாநாட்டில் மழை காலம் தொடர்கின்ற நிலையில் இந்த அதிர்வு பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டிருப்ப தாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையங்களில் உள்ள சில பொருட்கள் தூக்கி எறியப்பட்ட தென அவர்கள் கூறினர்.எனினும் படையினரால் அகற்றப் படுகின்ற கண்ணி வெடிகள் வெடிக்க வைக்கப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வு களாக இது இருக்கலாம் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக நாகர்கோவில் பகுதிகளிலும் இதை போன்று கண்ணிவெடி கள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் அங்கு வெடிக்கவைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் அதிர்வே இது வாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

மழைகாலம் காரணமாக இவ்வா றான அதிர்வுகள் அல்லது சத்தங் கள் அதிகமானதாக இருக்கலாம் என வும் புவியியலாளர்கள் கூறுகின்றனர்.எனினும் இது பூமி அதிர்ச்சியோ அல்லது குண்டு வெடிப்பா என்பது பற்றி நேற்று இரவுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல