ஞாயிறு, 21 நவம்பர், 2010

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கொழும்பின் பொரளை யில் நேற்று நடைபெற்ற துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொ வர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை பொரளையின் சன நெரிசலான பகுதியில் பலர் கண்முன்னே நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத் துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் இரு வரும் வான் வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருக் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் குறித்து பொரளை பொலி ஸார் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் இரண்டாம் பதவி பிரமாணம் கொண்டாட்டங்களை முன்னிட்டு பத்தடிக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் ஆயுதங்களுடன் கொழும்பில் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ள நிலையில் நடந்தேறி யுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக செய் தியாளர் தெரிவிக்கின்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல