இந்த நிலையில், கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஜுலியனை கைது செய்யுமாறு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு வக்கீல் மரியானா தெரிவித்தார். மேலும், சர்வதேச போலீசார் (இண்டர்போல்) உதவியை நாடப்போவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜுலியன் மறுத்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுவீடன் சென்றபோது, இரண்டு பெண்களுடன் மோதல் ஏற்பட்டதையே திரித்து பொய் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக