ஞாயிறு, 21 நவம்பர், 2010

திருமணம் பயனற்றது

திருமணம் குறித்து அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அங்குள்ள 18 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் விவாகரத்தான தாய் அல்லது விவாகரத்தான தந்தை அல்லது திருமணம் செய்யாமலே தங்களை பெற்ற தாய் என இப்படிப்பட்டவர்களுடன் தான் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் 29 சதவீத குழந்தைகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது.

இதில் 15 சதவீதம் பேர் விவாகரத்தான தாய் அல்லது தந்தையுடன் இருக்கின்றனர். 14 சதவீதம் பேர் திருமணமாகாமலேயே குழந்தை பெற்ற பெற்றோருடன் வாழ்கின்றனர். கடந்த 1960-ம் ஆண்டை விட, தற்போது 5 மடங்காக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்கர்கள் மத்தியில் திருமணம் மீதான நம்பிக்கை குறைந்து வருவது வெளிப்படையாக தெரிகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல