ஞாயிறு, 21 நவம்பர், 2010

உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் ஆபாசக் காட்சியில் உள்ளீர்களா ?

ஆபாச வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அது தொடர்பில் அறியத்தர ஒருவாரகால அவகாசம் கொடுத்துள்ளனர் பொலிஸார்.

சில இளைஞர், யுவதிகள் அவர்களுக்குத் தெரியாமலே தயாரிக்கப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாகவும், அவை இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதெனவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு அநீதி ஏற்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் உடனடியாக அதனை தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் மூலம் காட்சிகளைத் தயாரித்தவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவர் என அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபாசப் படங்களில் நடித்த இளைஞர் யுவதிகள் ஒரு மாதத்திற்குள் கைது செய்யப்படவுள்ளதாகவும், அதற்கென விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல