செவ்வாய், 9 நவம்பர், 2010

பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் திருமணம் எதிர்வரும் ஆண்டு ஜூலை 23 இல்?

பிரித்தானிய இளவரசர் வில்லியம் (28 வயது) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டனை (28 வயது) எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக பித்தானிய செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இளவரசர் வில்லியத்தின் இத்திருமணம், இளவரசர் சாள்ஸுக்கும் இளவரசி டயானாவுக்கும் திருமணம் நடைபெற்ற சென் போல் தேவாலயத்தில் இடம்பெற மாட்டாது என கூறப்படுகிறது. மாறாக இளவரசர் சாள்ஸுக்கும் கமீலாவுக்கும் திருமணம் நடைபெற்ற சென் ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் செய்யவே இளவரசர் வில்லியம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல