செவ்வாய், 9 நவம்பர், 2010

எயிட்ஸ் தொற்றை ஏற்படுத்திய பெண்ணை தேடி அலைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

தனக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்றை ஏற்படுத்திய பெண்ணைத் தேடியலைந்த கென்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 3 மதுபானசாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர்.

தலைநகர் நைரோபியின் வட கிழக்கே 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சியக்கோ நகரிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணொருவர் தனக்கு எயிட்ஸ் தொற்றை ஏற்படுத்தியுள்ளதாக கூறி அப்பெண் ணைத் தேடி துப்பாக்கியுடன் அலைந்ததாகவும் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சினமடைந்து மதுபானசாலைகளில் அவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் மாவட்ட ஆணையாளர் ஜோன் செலிமோ கூறினார்.

சூட்டுத் தாக்குதலை நடத்திய அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்ய முயன்றதாகவும் துப்பாக்கியில் ரவைகள் இல்லாத நிலையில் அம் முயற்சி கைகூடாமல் அவர் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவேளை அவரைத் தடுக்க முயன்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களில் இரு பெண்களும் 8 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல