செவ்வாய், 9 நவம்பர், 2010

கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த பெண் மாதுரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமானவர். இவரை அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கற்பழித்துவிட்டார். இது பற்றி மாதுரியும், அவரது கணவரும் ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.

ஊர் பஞ்சாயத்து கூடி வாலிபனை அழைத்து விசாரித்தனர். அந்த வாலிபனும் கற்பழித்ததாக குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
இதற்கு தண்டனையாக வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறியது. அதன்படி வாலிபர் 5 முறை செருப்பால் அடிக்கப்பட்டார்.

இவ்வளவு பெரிய குற்றத்துக்கு சாதாரண செருப்படி தண்டனைதானா? என மாதுரியும், கணவரும் வேதனை அடைந்தனர்.

தற்போது இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல