வெள்ளி, 19 நவம்பர், 2010

ஆர்ஜன்டீனாவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சக உறுப்பினரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு (காணொளி இணைப்பு)

ஆர்ஜன்டீனா நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவரின் கன்னத்தில் அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வரவு செலவுத்திட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரசீலியா கமானோ என்ற அப்பெண் உறுப்பினர் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான கன்கெல் என்பவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அதன் பிறகு அவர் வேகமாக நாடாளுமன்ற அறையை விட்டு வெளியேறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சூடான வாதப்பிரதிவாதங்களே இச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் கமானோ கருத்து தெரிவிக்கையில்,

"கன்கெல் நீண்டநாட்களாக என்னைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றார். எனது சுயமரியாதையை பாதிக்கும் விடயங்களை நான் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.

இதற்காக தான் நான் அவரைத் தாக்கினேன்" எனத் தெரிவித்தார்.

இச்சம்பவமானது அங்கு பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பில் கன்கெல் ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல