வெள்ளி, 19 நவம்பர், 2010

பழைய காரொன்றை வாங்குவதற்காக தமது மகளை விற்பனை செய்த பெற்றோர்

பாவனை செய்யப்பட்ட காரொன்றை கொள்வனவு செய்வதற்காக பெற்றோர் தமது மகளை விற்பனை செய்த சம்பவம் பிரான்ஸில் இடம் பெற்றுள்ளது.

“சப்ரினா' என்ற மேற்படி 23 வயது மகள், 3 வருடகாலமாக அவரை வாங்கியவர்களால் பாலியல் மற்றும் உடலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சப்ரினாவின் பெற்றோர் இரண்டாம் தர காரை வாங்குவதற்காக பிராங் பிரானொக்ஸ் (58 வயது) மற்றும் அவரது மனைவி புளோ ரென்ஸ் கார்ரஸ்கோ (56 வயது) ஆகியோருக்கு 600 ஸ்ரேலிங் பவுணுக்கு சப்ரினாவை விற்றுள்ளனர்.

இந்நிலையில் சப்ரினா, பிராங் புளோரன்ஸ் தம்பதியால் ஓர் அடிமையாக நடத்தப்பட்டுள்ளார்.

அழுக்கடைந்த தொழுவமொன்றில் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேற்படி தம்பதியின் 7 பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் சப்ரினாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறு தவறுகளுக்காக சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பியாலும், சிகரெட் முனையாலும் சப்ரினா சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் இரும்பு சட்டங்களாலும் தடிகளாலும் தாக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது பணத்துக்காக ஏனைய ஆண்களுடன் பாலியலில் ஈடுபடவும் அவர் அனுப்பப்பட்டார்.

இந் நிலையில் கடும் சுகவீனமடைந்த அவரை, பிராங் புளோரன்ஸ் தம்பதி பாரிஸிலுள்ள மருத்துவமனையொன்றுக்கு வெளியே கை விட்டு சென்றுள் ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்ட போது சப்ரினாவின் வாயில் பற்கள் எதுவும் இல்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.

இவ் வழக்கில் குற்றவாளிகளாக இனங்கா ணப்பட்டவர்கள் 2 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்ட னையை எதிர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல