வெள்ளி, 19 நவம்பர், 2010

அறுபது படையினரை புலிகள் கூட்டாக கொன்று புதைத்தனர்

இராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த படைவீரர்கள் கூட் டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறுபது படைவீரர்களை கூட்டுக் கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங் கிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் புலப்பட்டுள்ளது.சில ஆண்டுகளாக புலிகளினால் கைது செய்யப்பட்ட அரச படையினர் கிளிநொச்சியில் காணப்பட்ட சித்திரவதைக் கூடமொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.கைது செய் யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் 5 கடற்படை வீரர்களும் அடங்குவர்.போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் சடல த்தை தீயிட்டு கொளுத்தி பின்னர் அவற்றை மண்ணால் மூடியதாக விடுதலைப் புலி சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக லங்காதீப மேலும் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல