புதன், 10 நவம்பர், 2010

உலகிலேயே மிக பழமையான குளிர்சாதனப்பெட்டி (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்து நாட்டில் 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி ஒன்று இன்னும் நல்லநிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுதான் உலகிலேயே பழமையான தொடர்ந்து இயங்கி வரும் குளிர்சாதனப் பெட்டியாகும். இங்கிலீஷ் எலக்ட்ரிக் கம்பெனியின் தயாரிப்பான இந்த குளிர்சாதனப்பெட்டியை ஜார்ஜ், அய்வி ஆஷ்லே வாங்கினார்கள். அது முதல் இந்த குளிர்சாதனப்பெட்டி தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதில் உள்ள எரியும் பல்புகளை மட்டுமே அவர்கள் அவ்வப்போது மாற்றி இருக்கிறார்கள். மற்றபடி பழுது ஏதும் ஆகாமல் இந்த குளிர்சாதனப்பெட்டி கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வந்து இருக்கிறது.

ஆஷ்லே குடும்பத்தில் 3-வது தலைமுறை வந்து விட்டது என்றபோதிலும் இந்த குளிர்சாதனப்பெட்டி அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக நீடித்து வருகிறது.

இப்போது ஆஷ்லேயின் மகன் டான் ஆஷ்லே தான் இந்த குளிர்சாதனப்பெட்டிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவருக்கு வயது 68. இப்போது இந்த பெட்டி நிறைய சத்தம் போடுகிறது. அதனால் அதை வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து இருக்கிறேன். சத்தம் வருவதை தவிர வேறு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்று டான் கூறுகிறார். இதுவரை இது தன் செயல்பாட்டை ஒரு நாளும் நிறுத்தியது இல்லை என்றும் கூறுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல