திங்கள், 29 நவம்பர், 2010

மக்களை வெளியேற உத்தரவு!

கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியிருந்த மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள தால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இரத்தினபுரம் சிங்களப் பாடசாலைக்குப் பின்புறமாகவுள்ள நிலத்தில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியிருந்துள்ளனர்.

அரசாங்கத்தினால் குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அந் நிலத்தில் பயன்தரு மரங்களை நாட்டி யும் வீடுகளை அமைத்தும் மக்கள் வாழ்ந்து வந்தனர்.தற்போது இடப்பெயர்வின் பின் மீள்குடியமர்ந்து வரும் இந்நிலையிலேயே மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இரா ணுவம் பணித்துள்ளது. இதனால் சுமார் 18 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும் கிளி நொச்சி நகரை அண்டியுள்ள ஐந்தடிவான் என்ற ழைக்கப்படும் இடத்திலிருந்து வந்து குடிய மர்ந்தவர்களாவர். தற்போது செல்வதற்கு வேறு இடமில்லாத நிலையில் மக்கள் உள்ளனர். எனவே இவ் விடயத்தில் உரியவர்கள் கூடிய கவன மெடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல