நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தென்பகுதியில் சிங்கள மக்களில் பெரும் பான்மையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தது போல் வடக்கு கிழக்கில் பெரும்பாலும் அனைத்து தமிழ் மக் களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு மற்றும் இடம் பெயர்ந்த மக் களுக்கான மீள்குடியேற்றம் என்பன தொடர் பாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றபோதும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியவில்லை.
விடுதலைப்புலிகளுக்கும் படையினருக் கும் இடையிலான மோதல்களின் போது அப் பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அங்க வீனமாகியுள்ளனர், காணாமல் போயுள்ளனர், இப்படியான நிலைமையில் இலங்கை என்பது ஒரே நாடு ஒரே தேசம் என்று பேசும் போது உயிரிழந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்கள், வாழ்வாதார த்தை இழந்தவர்கள் போன்றோரு க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. வன்னியில் இடம்பெற்ற யுத் தத்தால் 2 இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் நன் கொடையில் கிடைக்கும் 50 ஆயிரம் வீடுகளையும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமான 80 ஆயிரம் வீடுகளையும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளையே நிர்மாணிக்க முடியும் எஞ்சிய ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வீடுகளை யார் திருத்துவது?
பெண்கள் மற் றும் சிறுவர் உரிமை கள் பற்றி ஜனாதி பதி அடிக்கடி பேசு கிறார். அப்படிப் பார்க் கும் போது 17 சிறை களில் 765 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். இதில் 50 பெண் களும் 5 குழந்தை களும் இருக் கின்ற னர். இருந்த 3,4 வயதுக் குழந்தை கள் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்தனவா? இல்லை யாரை யும் கொலை செய்தன வா? இவர்கள் செய்த பாவம் என்ன?
ஆகவே வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் முடிபடைவதற்கு முன்னதாக அந்தக் குழந்தைகளை விடுதலை செய்ய முடியுமாவெனப் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை பற்றிப் பேசும் ஜனாதிபதியிடம் கேட் கிறோம். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்கா ஒன்றரை வயது முதல் 80 வயது வரையா னோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையையும் பயங்கரவாத தடுப் புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் ஆசி யாவில் மட்டுமல்லாது உலகின் ஆச்சரியம் மிக்க நாடு இது தான். எதற்காக இந்த இனவாதம் மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என்பதில் நாம் அர்ப் பணிப்புடன் இருக்கின்றோம். அந்தயுத்தம் ஏற்படக் காரணமாகவிருந்த விடயங்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டு மொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும் என அரியநேத்திரன் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக