திங்கள், 29 நவம்பர், 2010

வீக்கி லீக்ஸ் இணையத்தில் இலங்கை இரகசியங்கள்

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசம் உள்ள இரண்டு இலட் சத்து ஆயிரத்து 287 இரகசிய ஆவணங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும். இவற்றில் சீனா தொடர்பான 8 ஆயிரத்து 320 ஆவணங்களும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக 7 ஆயிரத்து 95 ஆவணங்களும் இந்தியா தொடர்பாக 5 ஆயிரத்து 87 ஆவணங்களும் பாகிஸ்தான் தொடர்பாக 4 ஆயிரத்து 775 ஆவணங்களும் இலங்கை தொடர்பாக 3 ஆயிரத்து 166 ஆவணங்களும் பங்களாதேஷ் தொடர்பாக 2 ஆயிரத்து 182 ஆவணங் களும் அடங்கியுள்ளன.

இவற்றில் 220 ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் அமெ ரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார செயற்பாடுகள் தொடர்பாக உள்தகவல்களை உலக மக்களுக்கு வழங்குகின்றதென விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்கள் 1996 முதல் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க இரா ஜாங்க திணைக்களத்திற்கும் 274 தூதரகங் களுக்கும் இடையிலான இரகசிய தகவல் தொடர்புகள் சம்பந்தப்பட்டவையயனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேற்படி ஆவணங்களில் 3 ஆயிரத்து 325 ஆவணங்கள் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்தும் காத்மண்டிலிருந்து 2 ஆயிரத்து 278 ஆவணங்களும் இஸ்லாமாபாத் திலிருந்து 2 ஆயிரத்து 220 ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல