திங்கள், 29 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது

பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டார். தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு செல்லும் அவரின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானிய அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் அழைப்பில் அவர் பயணத்தை மேற் கொண்டால் தம்மால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். ஆனால் தனிப்பட்ட பயணங்களின் போது அது முடி யாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவர்களின் அழைப்பை தொடர்ந்தே ஜனாதிபதி மகிந்த அங்கு செல்கிறார். ஆனால் பிரித்தானியாவில் தற்போது மாணவர்களின் போராட்டம் நடைபெறுவதால் அங்கு உறுதி யற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் மகிந்த பிரித்தானியாவுக்குள் நுழைந்த பின்னர் கைது செய்யும் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று உடனடியாக அவரை கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும் அதற்கான ஆணை 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தின விழாவில் கிடைத்துள்ளதாக வும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரித்தானி யாவில் அவர்களுக்கு உள்ள ஆளுமையை காட்டுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் வாழும் சிங்கள மற்றும் பொன்சேகா மீதான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மீதான புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான ஆதரவுகளை வழங்கும் நிலையில் உள்ளனர். இதனிடையே பிரித்தானிய பிரதமரை சந்திப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல