செவ்வாய், 14 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில எமனின் ஏஜன்சிகள்

யாழ்ப்பாணத்தில் இப்ப பாருங்கோ முந்தி ஒருபோதும் இல்லாத அளவுக்கு விபத்துகள் பெருக்கிப் போச்சு.. இதுக்கு என்ன காரணம் என்டு வயதான அப்பு ஒருவரிட்ட கேட்டன். அந்தாள் அழுதழு சொன்ன விசயங்கள் இவைதான்

முந்திப் பாருங்கோ எமன் எருமை மாட்டில வாறாதா எல்லாரும் சொல்லுவாங்கள்….

இப்ப அவன் கனக்க வாகனங்கள் வைச்சு விதம் விதமா வந்து எங்களை கொண்டு போகத் திரியிறான்.

இப்ப சண்டை ஓய்ஞ்சு போச்சு…. இப்பிடியே இவங்களை விட்டால் கன அலங்கோலம் செய்வாங்கள்…

பிறகு தேவலோகம் வந்தும் எங்களுக்கும் நாடு கடந்த தேவலோகம் தா என்டு கேட்டாலும் கேப்பாங்கள்…

அதால அவங்களை நிம்மதியா இருக்க விட்டியோ உனக்குத்தான் கஸ்டம் என்டு எமனுக்கு யாரோ அண்டி விட்டதால வந்த வினை.. என்டு நான் நினைக்கிறன்.

யாழ்ப்பாணத் தமிழன் இப்ப எத்தனையோ பிரச்சனைகுள்ள அம்பிட்டு ஆப்பிழுத்த குரங்கு போல இருக்கிறான். அதுல முக்கியமான பிரச்சனை இந்த றோட்டு வழிய நடக்கிற அட்சிடன்ட்

பின்னால உறுமிக் கொண்டு வாற மோட்டுச் சயிக்கிள் ??? சத்தம் கேட்க வயித்தைக் கலக்குது பாருங்கோ… எங்க என்ர காலுக்கு கொண்டு வந்து ஓட்டிப் போடுவான் என்ட பயத்தில தான்.

யாழ்ப்பாணத்தில இப்ப மோட்டுச்சயிக்கிள் ஓடுற சில பரதேசிப் பயலுகளைப் பார்க்க உண்மையா எமன் போலத்தான் கிடக்குது பாருங்கோ….

ஒற்றக் காதுல தோடு.. கறுப்பு ரீசேட்டு, கறுப்பு லோங்சு…லோங்ச இறுக்கி கட்டுற அந்த கயித்தில ஒரு கான் போனு…கறுப்பு கண்ணாடி…

அட நல்ல மழை பெய்யவும் ஒரு பொடிப்பிள்ளை கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஓடுறான் என்டா பாருங்கோவன்

மோட்டுச் சயிக்கிளை மாத்திரம் ஒவ்வொரு நாளும் நல்லா குளிப்பாட்டி வடிவா வெச்சிருப்பாங்கள்…

ஆனால் தாங்கள் குளிக்கமாட்டாங்கள்..என்ன செய்யிறது.. எங்கட யாழப்பாணத்தில இப்ப புழு நெளிஞ்ச போல மோட்டச்சயிக்கிளுகள் நெளியுது இந்த நுளம்பு மோட்டுச்சயிக்கிள் என்டு ஒன்டு வந்து எல்லாரையும் படாத பாடு படுத்துது பாருங்கோ…

என்ர வயசு கிழவி ஒன்டும் அந்த மோட்டுச்சயி்கில் எடுத்திட்டாள் என்டா நம்புவிங்களோ.

பொலிஸ்காரனுக்கு நல்ல உழைப்பு இவங்கட மோட்டுச்சயிக்கிளால ஒருத்தரிட்டையும் லைசன்ஸ் இல்லை… பொலிசிட்ட அம்பிட்டால் 3 கிற்காட் வாங்கிக் குடுத்து சமாளிக்கலாம் என்டு எங்கட பொடியல் சொல்லுறாங்கள்

அதை விட யாழப்பாணத்து வீதிகளும் ரொம்ப மோசமாப் போச்சுதுங்கோ……. எங்கட கலாச்சாரம் போல குண்டும் குழியுமா கிடக்குது

நான் நினைக்கிறன் வீதியை இப்படி சீரழிய விடுறது சிங்கள அரசின்ட திட்டமிட்ட வேலையாய் இருக்கும் என்டு ஏனென்டா தமிழரை சனத்தொகையில் பெருகாது தடுப்பதற்கு இப்படி வீதியை சீரழிய விட்டிருக்கிறாங்களோ? என்ட கோணத்தில ஆராய வேண்டி இருக்குதுங்கோ

இப்படியான வீதியால எந்த வாகனத்தில வாற கர்ப்பிணிப் பெண்ணிட கர்ப்பமும் கலைஞ்சு போயிடு்ம் என்டு யோசிச்சு தான் இப்படி விட்டாங்களோ???

இதைப் பற்றி ஒருத்தருக்கும் பறைஞ்சு போடாதையுங்கோ… பிறகு ஆராவது யாழப்பாண தமிழ் அரசியல்வாதி இதையே வைச்சு ஒரு வருசத்துக்கு கத்திக் கொண்டு இருப்பான்.

இன்னுமொரு காரணம் கண்டறியாத கான்போன் வந்து செய்யிற பிரச்சனைதான்

ஆரும் ஒரு மிஸ் கோல் குடுத்தா சரி…. தம்பி அலேட் ஆகி ஓட்டிக் கொண்டிருக்கிற வாகனத்தையும் பாக்காமல் போய்க் கொண்டிருக்கிற வாகனத்தையும் பாக்காமல் பொக்கற்றுக்க கைய வைச்சு பாத்துப் போட்டுத்தான் அடுத்த வேலை செய்வான்…

இப்ப ஒரு ஸ்ரைல் வந்திருக்கு பாருங்கோ…. கெல்மட்டுக்குள்ள சொரிகிக் கொண்டு கான் போன் கதைக்கிறது … இப்படிச் செய்யிறவங்களைப் பிடிச்சு காதுக்குள்ள தார் ஊத்தவேணும் அப்பத்தான் என்ர மனம் சாந்தியடையும் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டு வாறவங்கள் தங்கட மனசுக்குள்ள பெரியாக்கள் என்ட நினைப்பில வாறது மற்ற பிரச்சனை றோட்டால வாற எல்லாரையும் நாய், பேய் என்டு நினைத்துக் கொண்டு மற்றவைக்கு வழி விடாது தான் நினைத்தால் மாத்திரம் சயிற் விட்டு ஓடுற பரதேசி றைவர்களை எனக்கு முன்னால கொண்டு வந்து நிப்பாட்டினால் என்ர பொல்லால அடிப்பன் அவங்களுக்கு.

அடுத்த பிரச்சனை இந்த மினிவஸ் ஓடுறவங்களிட தொல்லை கெட்ட தறுதலை பிடிச்ச நாய்கள் இந்த மினிவஸ் ஓடுறவங்கள். றோட்டால ஆமை வந்தது மாதிரி வருவாங்கள்…. என்னடா இவ்வளவு சிலோவா ஓடுறாங்கள் என்டு பாத்தா பிறகு பின்னாலை ஏதாலும் பஸ் அல்லது வேற மினிவான் வந்தா யம்போ ஜெட் போல பறப்பாங்கள்… உள்ளுக்கு நிக்கற எல்லாரும் உசிரைக் கையில பிடிச்சு வைச்சிருக்க வேணும்… ஒருக்கா நான் ஒரு மினிவஸ்ல ஏறி எனக்கு பயத்தில 1க்கு போட்டுது பாருங்கோ….

எல்லாம் நாங்கள் செய்த பாவம் என்டு யோசிச்சுக் கொண்டு இருக்கிறதில பலன் இல்லை. அந்தந்த இடத்தில வைச்சு நல்ல சாத்துச் சாத்தி அனுப்ப வேணும் …

இவ்வாறு கவலைப் பட்ட அப்புவின் குமுறல் போல் எத்தனையோ குடாநாட்டு மக்களின் மனங்களில் இந்த போக்குவரத்துப் பிரச்சனை பற்றி கவலை இருக்கின்றது…… அவர்களின் செய்திகளுடன் இன்னொருநாள் உங்களை சந்திக்கின்றேன்…

நாரதர்

யாழ்ப்பாணம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல