செவ்வாய், 14 டிசம்பர், 2010

விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க ஐ.எம்.எப் மும்முரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக் களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முயற்சித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் தமிழீழ விடு தலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும் அந்தச் சொத்துக்களைச் சுவீகரித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை யின் 1267ம் மற்றும் 1373ம் பிரகடனங்களின் படி சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரகடனங்களை அமுல்படுத்து வதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை யின் 1267ம் பிரகடனத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாதிகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை முடக்குதல்,பயணக் கட்டுப்பாடு விதித்தல்,ஆயுதக் கொடுக்கல் வாங் கல்களைத் தடை செய்தல் போன்ற நடவடிக் கைகளை மேற்கொள்ள முடியுமென இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல