செவ்வாய், 14 டிசம்பர், 2010

11 ஆண்டுகளின் பின்னர் பைசா கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது

பைசா கோபுரம் (Leaning Tower of Pisa) இத்தாலியின் பைசா நகரில் உள்ள பைசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,453 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது.

இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது. 1990, ஜனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, ஜூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல