புதன், 8 டிசம்பர், 2010

தான்சானியாவின் விடுதலை நாள்

தான்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ ஜனநாயகக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சான்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தான்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனிக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனிக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தான்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1996 இல் அரச அலுவலகங்கள் அனைத்தும் டார் எஸ் சலாமில் இருந்து டொடொமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது.

தலைநகரம் - டொடோமா (சட்டரீதியாக)

டார் எஸ் சலாம் (வர்த்தகத் தலைநகர்)

பெரிய நகரம் - டார் எ சலாம் ஆட்சி மொழி - சுவாஹிலி

மக்கள் - தான்சானியர்

விடுதலை - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து

பரப்பளவு - 945,087 கிமீ2
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல