வட கொரியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஸ்டுவார்ட் லெவேயினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விக்கி லீக்ஸ் வழங்கிய இந்த ஆவணம் தொடர்பிலான தகவல்களை அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை நேற்று வெளியிட்டது.
இந்த செய்தியின்படி வட கொரியா இலங்கை அரசாங்கத்திற்கு அதிக அளவிலான ரொக்கேட் லோஞ்சர்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கை அரசாங்கம் அவற்றை கொள்வனவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இந்த ஆயுத பரி மாற்றல்களுக்கான நிதி வழங்கல்களுக்கான சீனாவின் வங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தற்போது அந்த ஆயுதங்கள் இலங்கை அரசாங்கத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விக்கிலீக்ஸின் உதவியுடன் வெளிவந்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக