புதன், 8 டிசம்பர், 2010

இலங்கை யுத்தக் குற்றங்களில் இந்தியாவுக்கும் பாரிய பொறுப்பு! - அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன.

விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில் த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் றோ மற்றும் இராணுவ புலனாய்வு துறை யினரின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­வும் அவரது அரசாங்கமும் பாரிய யுத்தக் குற்றங்களை மேற் கொண்டமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர் வாகம் நன்கு அறிந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய தகவல் பரி மாற்றில் இந்த விடயம் தெரியவந் துள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி அந்த சஞ்சிகை தகவல் வெளி யிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வினால் கடந்த 2006ஆம் ஆண்டு யூலைமாதம் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதி ரான யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்த காலப்பகுதியில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா பல முறை வலி யுறுத்திய போதும் இலங்கை அவற்றை முழுமையாக நிராகரித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல