வியாழன், 13 ஜனவரி, 2011

1000 க்கு மேற்பட்ட சொற்களை ஞாபகம் வைத்துள்ள அபூர்வ நாய்

போர்டர் கோல்லி இன நாயானது 1000 க்கு மேற்பட்ட பொருட்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பதுடன் ஒரு பெயரை பிறிதொரு பெயரிலிருந்து வேறு பிரித்து அறியும் ஆற்றலையும் கொண் டிருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க ஷப்போர்ட் கல்லூரியைச் சேர்ந்த ஜோன் பில்லி மற்றும் அலிஸ்டன் ரெயிட் ஆகியோரால் சேஸர் என்ற போர்ட் கோல்லி இனத்தைச் சேர்ந்த நாயிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேஸர் என்ற இந்த நாய் 1022 விளையாட்டு பொம்மைகளின் பெயர்களைக் கற்றுள்ளது.

மேற்படி பொம்மையொன்றின் பெயரை எழுந்தமானமாக கூறும் போது, கூறுபவன் வார்த்தைகளை செவிமடுத்து சரியான பொம்மையை தெரிவு செய்யும் ஆற்றலை சேஸர் பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாது 1000 க்கு மேற்பட்ட எழுத்து வடிவிலான சொற்களையும் இந்த நாய் ஞாபகத்தில் வைத்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல